மகளிர் தினம்
மேற்கத்திய நாடுகள் உலகறிய தாங்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்கிறார்கள். மகளிர் அமைப்புகள் பெண்கள் சமஉரிமைக்காக போர்க்கொடி ஏந்தி போராடி வருகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளாலும், போராட்டங்களாலும், மகளிர் அமைப்புகளின் செயல்களாலும் பெண்சமுதாயம் முன்னேற்றமடைந்துவிட்டதா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா? என்றால் இல்லை என்றே கூறலாம்.
மேலை நாட்டினர் எதில் முன்னேறுகிறார்கள் எனில் பெண்ணியத்தின் கண்ணியம் களங்கப்படுத்துமுகமாக பெண்களின் ஆடைக்குறைப்பு செய்து அழகிப்போட்டி என்ற பெயரில் ஆபாசப்போட்டிகள் நடத்தி மனம் மகிழ்கிவதிலும், பெண்களை ஆபாசத்தின் அடையாளமாக (Sex Symbel-ஆக) மட்டும் பாவித்து வருவதிலும் முன்னேறியிருக்கிறார்கள். கருப்பைச் சுதந்திரத்தில் முன்னேறியிருக்கிறார்கள். மனிதப் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஓரின திருமணங்கள் (லெஸ்பியன் மற்றும் கே) அங்கீகாரத்துடன் நடந்தேறி வருகின்றனவே இவற்றில் இவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். மேலும் பெண்கள் சமஉரிமை பேசப்படும் இடமெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், கற்பழிப்புகளும் அதிகமாகவே நடைபெறுகின்றன.
இத்தகைய விஷயங்களில் வீறுநடைபோட்டு வரும் இவர்கள், இஸ்லாத்தில் பெண்சுதந்திரம் இல்லை, பெண்களுக்கு சமஉரிமை இல்லை என்றெல்லாம் ஊடகங்கள் வாயிலாக நூதன முறையில் அவதூறுப் பிரச்சாரங்கள் மேற்கொள்கிறார்கள்.
பெண்உரிமை பற்றியும், பெண் வாழ்க்கைத் திட்டம் பற்றியும், பெண்ணியத்தின் கண்ணியம் பற்றியும் இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அழகாக அடித்தளமிட்டுவிட்டது. ஆண் பெண் கலத்தல் இல்லாமல் பெண்கள் கல்வி கற்பதிலோ, பணிபுரிவதிலோ எந்தத் தவறுமில்லை. தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் உயர்கல்வியான மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலும் கணிசமாக முன்னேறி வந்துகொண்டிருக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கான சூழல்களும் உருவாகிக்கொண்டுதான் வருகின்றன. இஸ்லாமிய சமுதாய அமைப்பு இத்தகைய முன்னேற்றங்களை தங்களின் கடமையான எண்ணி செய்யவேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று, இல்லற வாழ்க்கையில் பெண்கள், ஆண்களைவிடச் சற்று அதிகமான பொருப்புகளை ஏற்றாகவேண்டியது நியதி. குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுத்துக்கொள்வது பெண்கள். ஒவ்வொறு ஆணின் வெற்றிக்குப்பின் ஓர் பெண் இருக்கிறாள் தாயகவோ, மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லது மகளாகவோ.
சமஉரிமை பேசும் மேற்கத்திய நாடுகளில் பெண்எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் காப்பகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் குழந்தைகள் வளர்கின்றன. பின்விளைவு முதியோர் காப்பகங்களும் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உருவாகின்றன. இந்த நிலை மேற்கத்திய நாடுகளில் மட்டும் என்றில்லை அதன் சாயலை நம் நாடுகளிலும் காணலாம். இவர்களின் இவ்வாறான முன்னேற்றம் நமக்குத் தேவையில்லை.
முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவில் பின்தங்கியிருக்கிறார்கள், வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் இதற்குக் காரணமாக "பர்தா முறை" பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று மேற்கோளிடுகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவு, அரசு வேலைவாய்ப்பு போன்றவைகளில் பின்தங்கியிருப்பது ஏற்கவேண்டிய ஒன்றுதான்.
இக்கருத்தில் கூறப்படுவதுபோல பெண்கள் மட்டும் அல்ல, முஸ்லிம் ஆண்களும் கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்புகளில் பின்தங்கியே இருக்கிறார்கள். காரணம் முஸ்லிம் சமுதாயம் மற்றவர்களால் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஒடுக்கப்படுகிறது என்பதே உண்மை.
உதாரணமாக இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராடிவருகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். இத்தகைய நிலை மாறவேண்டுமானால் முஸ்லிம்களும் கல்வி நிலையில் உயரவேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டும். அரசு வேலைவாய்ப்புகள் முதல் அரசியல் வரை முஸ்லிம்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும்.
ஆண், பெண் கலத்தல் மூலம் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கான வழிகளை இஸ்லாம் அடைக்கிறதே தவிர, பெண்களின் முன்னேற்றத்தையோ, சுதந்திரத்தையோ அல்ல.
